< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
14 March 2023 12:15 AM IST

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிணத்துக்கடவு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் வாசுதேவ் தலைமை தாங்கி பேசினார். கேசவமூர்த்தி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு தொகையை மீண்டும் வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிணத்துக்கடவு கிராம நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் ஜெகதீஷ் குமார், பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலதண்டாயுதபாணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்