< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|6 Sept 2023 12:15 AM IST
சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் தாலுகா அலுவலக முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், அமைப்பு செயலாளர் வெற்றிவேல், வட்ட தலைவர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் களப்பணி செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்காததை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.
இதில் வட்ட செயலாளர் சிவனேசன், வட்ட பொருளாளர் அசோக்குமார், வெங்கட்ராமன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.