திருவள்ளூர்
கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
|திருவள்ளூர் மாவட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாசில்தார் தமயந்தி, ஆர்.கே.பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்களை ராஜா நகரம் கிராமத்தில் சிலர் சுற்றி வளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அப்போது வருவாய்த் துறை அலுவலர்களை தாக்கிய மர்ம நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் இவர்கள் அனைவரும் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து அளித்தனர்.