தென்காசி
கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|சிவகிரியில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கை விட்டு மொத்தமாக திரும்ப பெற வலியுறுத்தியும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும், சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் அமுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் வேலுசாமி, விவசாய சங்க வட்டார செயலாளர் கருப்பையா, சிவகிரி நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாசலம், சிவகிரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.