திண்டுக்கல்
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகத்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பழனி கோட்ட தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயலாளர் வீரகடம்புகோபு, அரசு ஊழியர் சங்க தலைவர் முபாரக் அலி, அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும்நாள் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் திண்டுக்கல் கோட்ட தலைவர் சடையப்பன் நன்றி கூறினார்.