< Back
மாநில செய்திகள்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
18 Nov 2022 12:30 AM IST

தேனியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னமராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதுபோல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில், சுகாதார ஆய்வாளர் நிலை-1 காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் செய்திகள்