< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|18 Oct 2023 12:37 AM IST
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திடவும், குறைபாடுகளை களைந்திட வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.