< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|19 Aug 2023 2:13 AM IST
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தும் பணியினை சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் அருகே ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பேராவூரணி ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மகேஷ் தொடங்கி வைத்து பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்டச்செயலாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். முடிவில் ஜாக்குலின் மேரி நன்றி கூறினார்.