< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2022 12:15 AM IST

இந்தி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் தி.மு.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் தி.மு.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவதாஸ், மருது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷங்கள்

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்தியை திணித்து இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்தியசீலன், அன்பழகன், அருள்செல்வன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்