கன்னியாகுமரி
தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
|விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
குமரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஐடென்ட்ஸ் சோனி, நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார், அவைத்தலைவர் அய்யாதுரை, பொருளாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மைக்கேல் ரத்தினம், தங்ககிருஷ்ணன், புகாரி, டெல்வின், நாகராஜன், பரமராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் வைகுண்ட மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் துரை, நாகராஜன், பகுதிச் செயலாளர் பால்நாடார், தொழிற்சங்க நிர்வாகிகள் மணிகண்டன், ரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் வளர்மதி, கலாவதி, விஜயா, பொன்ராணி, ஜெயகொடி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.