< Back
மாநில செய்திகள்
மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 July 2022 10:41 PM IST

மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சி.எஸ்.சரவணன் வரவேற்றார். மாவட்ட அவத்தலைவர் பயாஸ் பாஷா, மாவட்ட பொருளாளர் ஆஞ்சி, எஸ்.கே. செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில பொறியாளர் அணி செயலாளர் ச.ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரியும், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தலைமைக் கழக பேச்சாளர் அலிஜான், முன்னாள் நகர செயலாளர் அருள் உள்பட ஏராளமான நர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கந்திலி ஒன்றிய பொருளாளர் குணபாலன் நன்றி கூறினார்.

முன்னதாக சாலையில் நின்று கொண்டிருந்த தே.மு.தி.க.வினரை உள்ளே தள்ளி செல்லுமாறு போலீசார் கூறியபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்