< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|28 Oct 2022 12:15 AM IST
திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் பாரதி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியை திணிக்கக் கூடாது என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.