< Back
மாநில செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:30 AM IST

நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஊட்டி பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காந்திய மக்கள் இயக்க மாநில மகளிர் அணி தலைவர் வள்ளி ரமேஷ் தலைமை தாங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் கட்டணமில்லா டவுன் பஸ் பயண திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். விரைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழுதடைந்த பஸ்களை நிறுத்திவிட்டு, தரமான பஸ்கள் இயக்க வேண்டும். கோவை-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை, நிர்வாகி சபாபதி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி ராமன் குட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஊட்டி பஸ் நிலையம் முன்புள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில் மனு கொடுத்து நூதனமாக வழிபட்டனர்.

மேலும் செய்திகள்