திண்டுக்கல்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தரேவில் உள்ள தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அதில் நேஷனல் ஹெரால்டு வழக்கில், ராகுல்காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசும், அமலாக்கத் துறையும் செயல்பட்டு வருவதை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மச்சக்காளை, மாவட்ட நிர்வாகிகள் முகமது இக்பால், ராமசாமி, சித்தையன்கோட்டை நகர தலைவர் பரீத்கான், கவுன்சிலர்கள் ஆண்டவர், மீனாவிஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் வத்தலக்குண்டு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் காமாட்சி தலைமை தாங்கினார். இதில், பொதுக்குழு உறுப்பினர் கோபால், பட்டிவீரன்பட்டி நகர தலைவர் பிரசன்னா, முன்னாள் தலைவர் ராஜாராம், வத்தலக்குண்டு நகர தலைவர் அப்துல் அஜீஸ், சேவுகம்பட்டி நகர தலைவர் நாகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.