< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

உடன்குடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடன்குடி:

உடன்குடி தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்து சஸ்பெண்டு செய்யப்பட்டவர் மீண்டும் அதே இடத்தில் பணிசெய்து வருவதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜ.க.வினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய விவசாய அணி தலைவர் திருநாகரன் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவமுருகஆதித்தன் கூட்டுறவு சங்கத்தில் வங்கியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து பேசினார். இதில் பா.ஜ.க.வினர் திரளாக கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்