< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 May 2023 12:15 AM IST

விழுப்புரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பெட்டிக்கடைகள் வரை விற்கப்படுவதை தடுக்கக்கோரியும் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரியா தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பார்த்திபன், வெங்கடேசன், எத்திராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளி, தங்கம், சதாசிவம், பாண்டியன், பொருளாளர்கள் குமாரசாமி, சத்யநாராயணன், மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி குபேரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், சுகுமார், விழுப்புரம் நகர தலைவர்கள் வடிவேல் பழனி, விஜயன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சரண்யா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்