< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|2 May 2023 11:31 PM IST
வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டி, மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தன், மாவட்ட பார்வையாளர் இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன்நாதன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.