< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 March 2023 12:15 AM IST

நாகையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை ரெயில் நிலையம் முன்பு பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட இணை செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடாசலம், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நாகையில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த காப்பக நிறுவனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.. இதுதொடர்பாக போலீசார் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்