< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

திப்பணம்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் இருந்து நாட்டார்பட்டி வழியாக அரியப்பபுரம் வரை செல்லும் சாலை, நாட்டார்பட்டியில் இருந்து திரவியநகர் வரை செல்லும் சாலை ஆகிய 2 சாலைகளையும் சீரமைக்கக்கோரி திப்பணம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் சேர்மன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியம், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் பாஸ்கர் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் விஜயசேகர், ஒன்றிய பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட இளைஞர் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர். ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்