கன்னியாகுமரி
பஞ்சாயத்து தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|பஞ்சாயத்து தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
களியக்காவிளை,
பஞ்சாயத்து தலைவர் கைதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு மாம்புறம் சாலை அருகே நிலம் அளவீடு செய்ய தாலுகா சர்வேயருடன் சென்றபோது நடைபெற்ற தாக்குதலில் மெதுகும்மல் பஞ்சாயத்து தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் சவார்கர் மற்றும் சரோஜா உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் ஒரு தலைபட்சமாக பஞ்சாயத்து தலைவர் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், ஆக்கிரமித்த நிலத்தை மீட்க தாலுகா சர்வேயருடன் அளவீடு செய்ய சென்ற பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரை தாக்கிய பெண்மணி மற்றும் அவரை சார்ந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீசாரை கண்டித்து முன்சிறை மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் களியக்காவிளை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பவுல்ராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் விஜயபிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட தலைவர் சி.தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் போலீசாருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.