மயிலாடுதுறை
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பா.ஜ.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வினோத் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் சுந்தரமுருகன், நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் பிரிவு மாநில பார்வையாளர் வக்கீல் ராஜேந்திரன், அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் கோவி.சேதுராமன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணைத்தலைவர்கள் மோடி கண்ணன், முட்டம் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேகதாது அணை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இதர பிற்பட்ட வகுப்பின் ஒன்றிய தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கிளை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தங்க.குணசேகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் நன்றி கூறினார்.