திருவாரூர்
திருவாரூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காய்கறிகளுக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
கொரடாச்சேரி:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காய்கறிகளுக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு தடுக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகன பதிவுக் கட்டணம், பத்திர பதிவுக் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருவாரூர் நெய்விளக்கு தொகுப்பு பகுதியில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காய்கறிகளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி கொளுத்தி வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், நகர துணை தலைவர் முறுக்கு பாண்டி உள்பட திரளான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.
பவித்திரமாணிக்கம்
இதேபோல் திருவாரூர் பவித்திரமாணிக்கம் கடைவீதியில்நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கே.ரவி தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் எட்டியலூர் சிவா, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் லோகநாயகி, கிளை தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகி வீரமணி, காளிதாஸ், பரசுராமன், அய்யப்பன், ஆறுமுகம், சசி, நாகலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்த நாகை மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் மாரிமுத்து, ராஜேந்திரன், நிர்வாகிகள் செல்வம், ராம்குமார், பாலா உள்பட பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர், ஆலங்காடு கிராமத்தில் நிர்வாகி முருகானந்தம் தலைமையிலும், ஜாம்புவானோடையில் ராம்குமார் தலைமையிலும், இடும்பாவனத்தில் நிர்வாகி மணி தலைமையிலும், தோலி கிராமத்தில் நிர்வாகி செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் அண்ணாநகர், பெரிய சின்களாந்தி, வேதாரண்யம் சாலை, புதிய பஸ் நிலையத்தில் உள்ள வள்ளுவர் சிலை, வெட்டுகுளம் ஆகிய 5 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி, பிரசார பிரிவு மாவட்ட தலைவர் இமயவர்மன், நகர தலைவர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்