< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|13 Oct 2022 12:15 AM IST
திண்டுக்கல்லில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராமு தேவர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நரசிம்ம வீரையன், அ.ம.மு.க. மகளிரணி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.