< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
29 Jun 2022 1:14 AM IST

ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்,

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 100 நாள் திட்ட பணிக்கான சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் வெற்றிவீரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, நமச்சிவாயம், காசிராஜன், பழனிவேல், லட்சுமி, பெருமாள், பாலு, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்