< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2022 9:34 PM IST

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனி வேல் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்