< Back
மாநில செய்திகள்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Sept 2022 4:54 PM IST

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்டஅ.தி.மு.க. சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள தி.மு.க. அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, வக்கீல் வேல்முருகன், மாவட்ட அவைத்தலைவர் இன்பநாதன், ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், பூண்டி மாதவன், சக்திவேல், ரவி, சீனிவாசன் குமார், ஒன்றிய அவைத் தலைவர் சிற்றம் ஜெ.சீனிவாசன், ஆர்.டி.இ சந்திரசேகர், வக்கீல்கள் ராம்குமார், சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களை வாட்டி வதைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும் முன்னாள்எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துகுமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் வேணுகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, இணை செயலாளர் சுபித்ராகுமார் மற்றும் பல்வேறு அணியினர் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்