< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
30 May 2023 12:15 AM IST

தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் புழக்கத்தை கண்டித்து மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் புழக்கத்தை கண்டித்து மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை கண்டித்தும், போதை பொருட்கள் புழக்கம் உள்ளதை கண்டித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சக்தி, மாவட்ட துணைச் செயலாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

கோஷங்கள்

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்பு, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவைகளை கண்டித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ஜனார்த்தனன், கண்ணன், மகேந்திரவர்மன், இளங்கோவன், நற்குணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணக்குடி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்