மயிலாடுதுறை
கோமலில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கோமலில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் கடைவீதியில் மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து குத்தாலம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன் கலந்து கொண்டு பேசினார் ஆர்ப்பாட்டத்தில் குத்தாலம் வடக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் செழியன், கோனேரிராஜபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரபோஸ் வர்மா, தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கோமல் முத்து நன்றி கூறினார்.