< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஆவடியில் பா.ஜ.க பிரமுகர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
|3 May 2023 11:08 AM IST
ஆவடியில் பா.ஜ.க பிரமுகர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பா.ஜ.க பட்டியலினப் பிரிவு மாநில பொருளாளர் பி.பி.ஜி.டி சங்கர் படுகொலையை கண்டித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியலினப் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு பி.பி.ஜி.டி சங்கர் படுகொலையை கண்டித்தும், அதற்கு சி.பி.ஐ விசாரணை நடத்திட கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தலைவர் அஸ்வின்குமார், மாநில பட்டியலினப் பிரிவு துணைத்தலைவர் வெற்றிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.