< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
அனகாபுத்தூரில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
|2 Sept 2023 7:31 AM IST
அனகாபுத்தூர்,
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் கிளை நூலகம் அருகே அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றும் முடிவோடு இருக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து குடியிருப்போர் நலசங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள சாந்தி நகர், டோபிகானா தெரு, தாய்முகாம்பிகை நகர், காயிதேமில்லத் நகர் பகுதி மக்களை காலிசெய்யுமாறு வலியுறுத்தும் அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.