< Back
மாநில செய்திகள்
வாழப்பாடி, ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம்
மாநில செய்திகள்

வாழப்பாடி, ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
7 July 2022 4:00 AM IST

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வாழப்பாடி, ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாழப்பாடி

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய பா.ஜனதா அரசை கண்டித்தும், திருமாவளவனை விமர்சித்தவர்களை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் முல்லைவாணன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சமத்துவன், துணை செயலாளர் வை.ஆதவன், ஏற்காடு தொகுதி செயலாளர் ஆ.பாவலன், செய்தி தொடர்பாளர் நாராயணன், மாவட்ட பொறுப்பாளர் முருகேசன், மாநில துணை செயலாளர் வீர.ஆதித்தியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

ஓமலூர்

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் வேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜுனன், மாநில ஊடக பிரிவு துணை செயலாளர் மணிகுமார் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் மூர்த்தி, தர்மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அமைப்பாளர் வீராசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்