< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மும்மூர்த்தி விநாயகர் கோவில் இடிப்பு
|29 July 2022 1:29 AM IST
மும்மூர்த்தி விநாயகர் கோவில் இடிப்பு
தஞ்சை மானம்புச்சாவடியில் எம்.கே.மூப்பனார்சாலையும், வெங்கடேச பெருமாள் கோவில் தெருவும் சந்திக்கும் பகுதியில் மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மும்மூர்த்தி விநாயகர், துர்க்கை அம்மன், நவக்கிரக சாமிகள் இருந்தன. இந்தநிலையில் வடிகால் மீதும், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலும் மும்மூர்த்தி விநாயகர் கோவில் இருப்பதாக கூறி இந்த கோவிலை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தினார்.அதன்படி கோவிலில் நேற்றுமுன்தினம் பாலாலயம் செய்யப்பட்டு, மும்மூர்த்தி விநாயகர், துர்க்கைஅம்மன், நவக்கிரக சாமிகள் எல்லாம் மானம்புச்சாவடியில் உள்ள மற்றொரு கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. பின்னர் நேற்றுமாலை முதல் மும்மூர்த்தி விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது.