< Back
மாநில செய்திகள்
பெருமாள்மலை கோவில் நுழைவு வாயில் வளைவு இடிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

பெருமாள்மலை கோவில் நுழைவு வாயில் வளைவு இடிப்பு

தினத்தந்தி
|
10 Oct 2022 2:47 AM IST

பெருமாள்மலை கோவில் நுழைவு வாயில் வளைவு இடிக்கப்பட்டது.

துறையூர்:

துறையூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் மலை கோவிலின் நுழைவு வாயில் வளைவு இருந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, இந்த பிரதான நுழைவு வாயில் வளைவு வழியாக பக்தர்கள் மலை ஏறிச்சென்று பெருமாளை தரிசனம் செய்து வந்தனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இந்த வழியாக கோவிலுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக அந்த நுழைவு வாயில் வளைவு பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்