< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழைய பல்லாவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
|7 Sept 2024 6:41 AM IST
50 ஆண்டுகள் வசித்த வீட்டை ஒரே இரவில் இடித்து விட்டதாக பொதுமக்கள் கண்ணீர் வடித்தனர்.
சென்னை,
பழைய பல்லாவரம் காந்திநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்தநிலையில் தனிநபர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை புல்டோசர் கொண்டு நேற்று இடித்து தள்ளப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் நடுரோட்டில் குழந்தைகளுடன் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
50 ஆண்டுகள் வசித்த வீட்டை ஒரே இரவில் இடித்து விட்டதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க கூறினர். வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.