< Back
மாநில செய்திகள்
பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு

தினத்தந்தி
|
20 Jan 2023 1:20 AM IST

பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது.

லால்குடி:

லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒரு பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுப்பாதையை ஆக்கிரமித்த வீட்டை அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி லால்குடி நகராட்சி ஆணையர் குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

மேலும் செய்திகள்