< Back
மாநில செய்திகள்
அழகுராஜ பெருமாள் கோவில் இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அழகுராஜ பெருமாள் கோவில் இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

தினத்தந்தி
|
11 Aug 2022 11:46 PM IST

தக்கோலத்தில் கோவில் இடங்களில் இருந்து ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார்.

தக்கோலத்தில் கோவில் இடங்களில் இருந்து ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார்.

கோவில் இடம் ஆக்கிரமிப்பு

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகுராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் 53 குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர். சென்னை ஐகோர்ட்டு கோவில் இடம் ஆக்கிரமிப்பை அகற்றி, கோவிலை புனரமைக்க உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையினர் கோவில்இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும், இல்லையென்றால் 11-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அகற்றம்

அதன்படி நேற்று அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்த 53 குடும்பங்களுக்கு நகரிகுப்பம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்படவுள்ள இடத்தினையும் கலெக்டர் பார்வையிட்டு, இடங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதை கேட்டறிந்தார். அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, பேரூராட்சித் தலைவர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சந்தியா, தக்கோலம் செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, நெடுஞ்செழியன், லட்சுமி நாராயணன், குமரவேல் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்