< Back
மாநில செய்திகள்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் தண்டால் எடுத்து போராட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் "தண்டால்" எடுத்து போராட்டம்

தினத்தந்தி
|
19 Jun 2022 12:55 AM IST

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் “தண்டால்” எடுத்து போராட்டம்

இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், 3 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதன்படி நேற்று முதல் நாள் தஞ்சை ரெயில் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சை மாநகர செயலாளர் காதர் உசைன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ஹரிபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஆம்பல் துரை ஏசுராஜா கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் இந்தத் திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை சிதைத்துவிடும். எனவே இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட வாலிபர்கள் சாலையில் தண்டால் எடுத்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். போராட்டத்தில் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் பெர்னாட்ஷா மற்றும் மாநகர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

மேலும் செய்திகள்