< Back
மாநில செய்திகள்
ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும்: நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
மாநில செய்திகள்

ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும்: நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

தினத்தந்தி
|
28 July 2023 7:24 PM IST

ஜனநாயகம் வளர்ச்சி தொடர் மோடி பிரதமராக வேண்டுமென ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

ராமநாதபுரம்,

அண்ணாமலை நடைபயணம் தொடக்க நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ராமநாதபுரத்திற்கு வந்திருப்பது உலகத்தின் பார்வை இன்று ராமேஸ்வரத்தில் பதிந்துள்ளது. அரசியல் நடைபயணத்தை பாஜக சார்பில் அண்ணாமலை முன்னெடுத்திருக்கிறார். இது ஒரு நியாயமான நடைபயணமாக பேசப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க நான் வந்துள்ளேன். பிரதமர் மோடி, நமது நாட்டை வல்லரசு நாடுகளுக்கிடையே தலைநிமிரச்செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை வீதி வீதியாக, வீடு வீடாக அண்ணாமலை எடுத்துச்செல்ல இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்