< Back
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை கைவிட கோரி  5 மாவட்ட விவசாய சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
தேனி
மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை கைவிட கோரி 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
22 July 2022 10:42 PM IST

முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை கைவிட கோரி 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் அமல்படுத்தப்படும் ரூல் கர்வ் விதியை கைவிட வேண்டும், முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்கிட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய கேரள அரசை கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

இதனை சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தொடங்கிவைத்தார். இதில் சங்க துணைத் தலைவர் ராஜீவ், மாவட்ட செயலாளர்கள் ரஞ்சித் குமார், ராமேந்திரன், பொருளாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் சங்க தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணையின் உரிமைகளை மீட்க 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று, மத்திய மாநில அரசுகளிடம் ஒப்படைப்போம். மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தொடருவோம் என்றார்.இதைத்தொடர்ந்து கூடலூர் பழைய பஸ் நிலையத்திலும் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்