கரூர்
கரூர் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர கோரிக்கை
|கரூர் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர வேண்டும் என விக்கிரமராஜா கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று கரூர் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள மாநகராட்சி கடைகளுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து வணிகர்களையும் இணைத்து முகாம் அமைத்து, ஆணையர் குறைகளை கேட்டறிய வேண்டும். எந்த வரி பாக்கியும் இல்லாத சூழல் உருவாக்கி தருவதற்கு வியாபாரிகள் உறுதி ஏற்றுள்ளனர்.கரூர் காமராஜ் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர வேண்டும். பண்டிகை காலங்கள் வர உள்ளதால் எந்த நேரமும் கடையை திறக்க ஆவனம் செய்ய வேண்டும். பட்டாசு கடைகளுக்கு விரைவாக உரிமம் (லைசன்ஸ்) தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மாநகராட்சி வசதி திட்டங்களுக்கு வணிகர்கள் உறுதுணையாக இருப்பார்கள், என்றார். அப்போது கரூர் மாவட்ட செயலாளர் கே.எஸ். வெங்கட்ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.