< Back
மாநில செய்திகள்
தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தனியிடம் ஒதுக்க வேண்டுகோள்
அரியலூர்
மாநில செய்திகள்

தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தனியிடம் ஒதுக்க வேண்டுகோள்

தினத்தந்தி
|
2 Sept 2023 1:28 AM IST

தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தனியிடம் ஒதுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், அதன் கவுரவ தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீ்ல் அணியின் மாநில துணை செயலாளர் சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசினார். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட தற்போது பழமையான பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தின் கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டி, அங்கு தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தனியிடம் ஒதுக்க வேண்டும். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா மையத்தில் திருவள்ளுவருக்கு சிலையை மாவட்ட நிர்வாகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்