< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை
|24 Jun 2022 12:34 AM IST
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் முக்கியமான சில சாலைகளும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் உள்ள சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.