< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
|15 Nov 2022 12:53 AM IST
சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் மெயின்ரோட்டில் இருந்து பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதில் பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை செல்லும்போது டயர் பஞ்சராகி பழுதாகும் நிலையும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
தேங்கியுள்ள மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தி, பள்ளத்தில் மண் கொட்டி மேடாக்கி சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.