< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அல்வா கொடுத்து கோரிக்கை... மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன போராட்டம்
|28 Jan 2024 10:49 PM IST
நிவாரண நிதியை விடுவிக்க கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அல்வா தரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய நிவாரண நிதியை விடுவிக்க கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அல்வா தரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மழை பாதிப்புக்கு நிவாரண நிதி கிடைக்க வேண்டி வேம்படி இசக்கியம்மன் ஆலயத்தில் மனு அளித்து கோரிக்கை வைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர், பக்தர்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.