அரியலூர்
விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க கோரிக்கை
|விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழப்பழுவூர்:
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 6-வது விவசாய சங்க ஒன்றிய மாநாடு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குச்சி கிராமத்தில், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் மணியன், செயலாளர் மகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் புனிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு ஒரு குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கோக்குடி பெரிய ஏரியின் களிங்கு பகுதியை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, அதிக படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் பகுதியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.