< Back
மாநில செய்திகள்
திருச்சியில் மின்வாரிய அலுவலகங்களில் கோரிக்கை விளக்க கூட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சியில் மின்வாரிய அலுவலகங்களில் கோரிக்கை விளக்க கூட்டம்

தினத்தந்தி
|
18 March 2023 2:53 AM IST

திருச்சியில் மின்வாரிய அலுவலகங்களில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.

நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் விடுவதை கைவிட வேண்டும். 22.2.2018 அன்று ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 28-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர். பேரணியின் நோக்கத்தை விளக்கி திருச்சி பெருநகர் வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மன்னார்புரம், திருச்சி, மணப்பாறை, துறையூர், லால்குடி, ஸ்ரீரங்கம் முசிறி கோட்ட அலுவலகங்கள் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மேற்பார்வைபொறியாளர் அலுவலகங்கள் முன்பு நடந்த கூட்டத்துக்கு கூட்டுக்குழு மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்