< Back
மாநில செய்திகள்
கோரிக்கை விளக்க கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கோரிக்கை விளக்க கூட்டம்

தினத்தந்தி
|
18 March 2023 3:59 AM IST

மின்வாரிய ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது. சி.ஐ.டி.யு. திட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் சம்மேளனம் கண்ணன், சி.ஐ.டி.யு. பீர்முகமதுஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் மின்ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்