திருவாரூர்
ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்
|ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் இளவரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் இளவரி பேசுகையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்க கூடாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு அண்மையில் அறிவித்த அகவிலைப்படி உயர்வை நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலகங்கள், கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றார். இதில் ஐ.என்.டியூ.சி. தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராஜீவ் காந்தி, மண்டல தலைவர் அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.