< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக ஆட்சியில் 'டீலக்ஸ் பேருந்து'! திமுக ஆட்சியில் 'டீ மேட் பால்'? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
|25 Aug 2022 9:29 PM IST
"டீ மேட்" பாக்கெட் கட்டாய விற்பனையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"ஆரஞ்சுப் பாக்கெட்டிற்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதைவிட லிட்டருக்கு ரூ.12 அதிகவிலையுள்ள "டீ மேட்" பால்பாக்கெட்டை கட்டாய விற்பனை செய்வதாக ஆவின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் "டீலக்ஸ் பேருந்து"! திமுக ஆட்சியில் "டீ மேட் பால்"?.மக்களின் தலை மீது மறைமுக விலையேற்றும் கழகங்களின் "விஞ்ஞான விலையேற்றத்தை" மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.
அமைச்சரும், அதிகாரிகளும் ஆரஞ்சுப் பாக்கெட் செயற்கைத் தட்டுப்பாட்டை நீக்கவும், "டீ மேட்" பாக்கெட் கட்டாய விற்பனையைத் தடுத்து நிறுத்தவும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர், அமைச்சர் சிவசங்கர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளது.