< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம்
|7 Jun 2023 6:50 PM IST
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கிறது. இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கு கவர்னரும் அனுமதி வழங்கி இருக்கிறார். ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான பாடப் பகுதிகள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப்பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு தொடர்பான 5 கேள்விகள் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த 5 கேள்விகளும் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகத்தில் இந்த இந்த புதிய பகுதி அமலுக்கு வருகிறது.